இராணுவ நடவடிக்கை காரணமாக மூதூரில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மேலும் ஒரு தொகுதியாளர் இன்று சனிக்கிழமை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.
மண்முனை வடக்கு, மண்முனை, மண்மனை தென்எருவில் ஆகிய பிரதேசெயலாளர் பிரிவுகளில் தங்கியுள்ள 114 குடும்பங்களைச் சேர்ந்த 327 பேர் 14 பஸ் வண்டிகளில் வாகரை வழியாக இன்று மூதூருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.இம்மக்கள் தங்கபுரம், ஸ்ரீ நிவாசபுரம், இத்திக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர்.
Friday, 4 July 2008
327 பேரை மீளவும் குடியேற்ற நடவடிக்கை மண்டூர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment