Friday, 4 July 2008

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் – மனோ கணேசன் சந்திப்பு

ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் தமிழ்மக்களுக்கு எதிராக வெள்ளை வானை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள்,

பலவந்தமாக காணாமல் போகசெய்தல் மற்றும் சட்டத்திற்கு புறம்பான முறையில் மேற்கொள்ளப்படும் கொலைகளை உடனடியாக தவிர்க்கும் அரசாங்கத்தின் பொறுப்பை நிறைவேற்றிக் கொள்ள உதவியை வழங்குமாறு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தனிய உயர்ஸ்தானிகர் கலாநிதி பீட்டர் ஹொக்சை இன்று சந்தித்த போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் மனித உரிமை விடயம் தொடர்பி;ல் பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் செயற்படும் விதம் குறித்து மனோ கணேசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

காணாமல் போவது மற்றும் ஒருதலைப்பட்சமாக கைதுகளை தடுக்கும்நோக்கிலேயே வடக்கில் உள்ள தமிழர்களை தான் கொழும்புக்கு வர வேண்டமாம் என கூறியதாகவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

No comments: