Friday, 4 July 2008

உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு ஒக்கம்பிட்டியவில் சம்பவம்

புத்தள ஒக்கம்பிட்டிய பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையிலான ஆணொருவரது சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 6 மணியளவிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமாகிய ரஞ்சித் குணசேகர தெ?வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில், புத்தள ஒக்கம்பிட்டிய 3ஆம் மைல் கல்லுக்கு அருகில் உருக்குலைந்த நிலையிலான சடலம் ஒன்று காணப்படுவதாக புத்தள பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அச்சடலத்தை மீட்டு மொனராகலை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட இச்சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. உரிய பிரேத பரிசோதனைகளை அடுத்து சடலம் குறித்த தகவல்கள் சில வெளியாகும் என்றார்.

No comments: