பொலன்னறுவை அரிசி ஆலைகளில் கப்பம் பெற்ற 4 ரி.எம்.வி.பி உறுப்பினர்கள் நேற்றிரவு பொலன்னறுவை காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கப்ப பணத்தை பெற்று தப்பிச் செல்லும் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஆயுதங்களுடன் சென்ற ரி.எம்.வி.பியினர் பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளின் உரிமையாளர்களை அச்சறுத்தி 2 லட்சம் ரூபாவரை கப்பமாக பெற்றுள்ளனர்.
பணத்தை கொடுக்க மறுத்த அரிசி ஆலை உரிமையாளர்களை தாக்கி அவர்களிடம் இருந்த பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பறித்துச் சென்றுள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். மதீனா, லீலா, மன்சூர் ஆகிய அரிசி ஆலைகள் இவற்றில் அடங்கும் என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் இது குறித்து காவற்துறையினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, முச்சக்கர வண்டியில் சென்றுக் கொண்டிருந்த ரி.எம்.வி.பியினர் பொலன்னறுவை காவற்துறை சோதனை சாவடியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தாம் பிள்ளையானின் ஆட்கள் என கூறி இவர்கள் கப்பம் பெற்றதாக அரிச ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட ரி.எம்.வி.பியினரை விடுதலை செய்யுமாறு உயர் மட்டத்தில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக பொலன்னறுவை காவற்துறையில் சேவையாற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment