1990ல் கிழக்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சமயத்தில் தன்னால் கைதுசெய்யப்பட்ட 400 போலீஸாரை பொட்டு அம்மான் கொலை செய்தார் என கருணா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசு விசாரணைக்கு எடுக்கவிருக்கும் இக்கொலைகளுக்கும் தமக்கும் நேரடி தொடர்புகள் எதுவுமில்லை என தெரிவித்த கருணா, கைதுசெய்யப்பட்ட 400க்கும் அதிகமான போலீஸாரை கொலை செய்வது தனது எண்ணமாக இருக்கவில்லை என்றும் அவர்களை யாழ்பாணத்துக்கு கொண்டு செல்ல பொட்டு அம்மானிடம் கையளிக்குமாறு தனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவிடப்பட்டதாகவும் , அவர்களை யாழ்பாணத்துக்கு கொண்டு செல்லும் வழியில் பொட்டு அம்மான் அவர்களை கொன்றதாக பின்னர் தமக்கு செய்திவந்தாகவும் கருணா இன்று தெரிவித்தார்.
இப் போலீஸார் கைது செய்யப்படும் போது கருணா கிழக்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோடு , கருணாவின் நேரடிப் பணிப்பிலேயே இக் கைதுகள் அப்போது நடைபெற்றன.
அடுத்த பொதுத் தேர்தலில் TMVP கட்சி 10 ஆசனங்களில் போட்டியிட உள்ளதாகவும் அதில் தானும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு செல்ல இருப்பதாகவும் , TMVP கட்சிக்கு தன்னைத் தவிர வேறு எவரும் தலைவரல்ல என்றும் கருணா தெரிவித்தார்.
பிள்ளையான் முதலமைச்சராக இருப்பது கட்சிக்கு மிகவும் அத்தியவசியமானது என்றும் தாம் விரைவில் ஜனாதிபதியை சந்திக்கவிருப்பதாகவும் கருணா தெரிவித்தார்.

No comments:
Post a Comment