விடுதலைப்புலிகளின் கொழும்பு தாக்குதல்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு போலீஸாரின் விசாரணையில் இருக்கும் திரைப்பட கூட்டுஸ்தாபன முன்னாள் இயக்குனர்களில் ஒருவரான தேவதாஸனை அப்பதிவிக்கு நியமித்தது தொடர்பாக ஜேவீபியின் பிரச்சார செயலாளரான விஜித ஹேரத், ஒரு மணி நேரத்துக்கு மேல் இரகசியப் போலீஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு இரகசிய போலீஸாரினால் தான் அழைக்கப்பட்டதாகவும், அங்கு சென்ற போது தேவதாஸனை திரைப்பட கூட்டுஸ்தாபனத்தில் இயக்குனர் பணிக்கு அமர்த்துவதற்கு முன் அவரை எப்படித் தெரியும் என்றும் ,
அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட தொடர்புகள் இருந்தனவா? அவரை அப்பதவிக்கு அமர்த்துவதற்கு என்ன காரணம் போன்ற கேள்விகள் இரகசிய போலீஸாரால் கேட்கப்பட்டதாகவும் ,
ஒரு கலைஞர் என்ற ரீதியிலும், கலை அமைப்புகளது வேண்டுதல்களை கணக்கில் எடுத்தும், அவரை தான் அப்பதவிக்கு அமர்த்தியதாகவும் இரகசியப் போலீஸாரிடம் தான் கூறியதாக விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஆனாலும் விஜித ஹேரத் மற்றும் ராமலிங்கம் சந்திரசேகரன் ஆகிய இரு அமைச்சர்களையும் இரகசியப் பொலீஸார் விசாரணை செய்துள்ளதாக சிரேஸ்ட்ட போலீஸ் அதிகாரியான ரஞ்ஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment