எதிர்வரும் 48 மணித்ததியாலங்களிற்குள் நாட்டில் எப்பகுதியிலேனும் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர் எனவும், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுமாறும் ஊடக அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:
நாட்டில் எப்பகுதியிலேனும் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் புலிகள் தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.
எனவே பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை நிறுத்தப் போராட்டம் போன்ற நடவடிக்கைகளில் எவரும் ஈடுப்பட வேண்டாம்.
தயவு செய்து தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகள் என அவர் கூறினார்
Monday, 7 July 2008
48 மணித்தியாலங்களிற்குள் புலிகள் தாக்குதல் நடத்தலாம்-- அபேவர்தன எச்சரிக்கை!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment