Monday, 7 July 2008

சுவிட்சர்லாந்தில் தமிழ் சிறுவர்களுக்கு ஈழ வரலாற்றை கற்பிக்கக் கூடாது--இலங்கைத் தூதுவர் ரி.பி. மடுவேகெதர

சுவிட்சர்லாந்தின் தமிழ் பாடசாலைகளில் வரலாறு பாடத்தில் ஈழ வரலாறு கற்பிக்கப்பட்டு வருவதாகவும், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சுவிட்சர்லாந்து மக்கள் புதிய இலங்கைத் தூதுவர் ரி.பி. மடுவேகெதரவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் இலங்கைத் தூதுவர் சுவிட்ஸர்லாந்து வாழ் இலங்கையர்களை சந்தித்த போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படங்களுடன் கூடிய வரலாற்று நூல்களைப் பயன்படுத்தி பாடம் கற்பிக்கப்படுவதாக அந்நாட்டு இலங்கையர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சுவிட்சர்லாந்துக்கான புதிய இலங்கைத் தூதுவர் அந்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து மடுவேகெதர சுவிட்சர்லாந்து பொலிஸாருக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: