Friday, 18 July 2008

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு ஜப்பான், 500 மில்லியன் பெறுமதியான உணவுப் பொருட்கள்

யுத்த அனர்த்தம் காரணமாக அகதிகளாகியுள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்கென 500 மில்லியன் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களை ஜப்பானிய அரசாங்கம் வழங்கவுள்ளது.
இதன்படி 5,600 மெற்றிக் தொன் அரிசியும், 110 டொன் மீனையும் வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 275,000 பாடசாலை மாணவர்களுக்கும், 350,000 பொதுமக்களுக்கும் இந்த உணவுப் பொருட்கள் இரண்டு மாதத்திற்கு போதுமானதெனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: