Friday, 18 July 2008

ஈழத்தீவில் வணிக - பூகோள நோக்கத்துடன் ஆசிய வல்லரசுகள்

ஈழத்தீவில், வணிக - பூகோள நோக்கத்துடன் ஆசிய வல்லரசுகள் செயற்படுவதாக, அமெரிக்க நாளேடு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து , நேற்று ஆசிரியர் தலையங்கத்தை வெளியிட்டிருக்கும் ‘த பொஸ்ரன் குளோப்’ (The Boston Globe) நாளேடு, பர்மா, சிம்பாப்வே, சூடான் ஆகிய நாடுகளின் வரிசையில், அடுத்தபடியாக அனைத்துலக அரங்கில் ஓரங்கட்டப்படும் அபாய நிலையை நோக்கி,
சிறீலங்காவும் நகர்ந்து கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈழத்தீவில் நிலவும் இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவிபுரியக் கூடிய நிலையில், சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற வல்லரசுகள் உள்ள பொழுதும், அங்கு தமது
வணிக நலன்களை முன்னெடுப்பதிலும், பூகோள அரசியல் ஆதிக்கத்தை தக்க வைப்பதிலுமே, இவை ஆர்வம் கொண்டிருப்பதாகவும், ‘த பொஸ்ரன் குளோப்’ நாளேடு கூறியுள்ளது.

அத்துடன், தமிழ் மக்களின் தாயக பூமியில், அவர்களுக்கு போதிய அளவு சுயாட்சியை மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் வழங்கத் தவறினால், ஈழத்தீவில் யுத்தம் நீடித்து, ஓரம்கட்டப்படும் நாடுகளின் வரிசையில் சிறீலங்காவும் இணைத்துக் கொள்ளப்படுவதை தவிர்க்க
முடியாது என்றும், ‘த பொஸ்ரன் குளோப்’ நாளேடு எச்சரித்துள்ளது.

No comments: