புண்ணியவாதம் பத்மநாதன் என்ற தனது மகனான கடத்த சிலர் முயற்சி செய்வதாக அவரது தாயார் நடுவிலான் தெய்வானை மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பு கதிரேசன் வீதியிலுள்ள எவரெஸ்ட் லொட்ஜில் தாங்கள் தங்கியிருப்பதாகவும் 9ஆம்திகதி அதிகாலை ஐந்து மணியளவில் வெள்ளை வானில் பிரவேசித்த பலர் தனது மகனைக் கடத்த முயற்சி செய்ததாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.
அதிகாலை வெளையில் கதவைத் தட்டி பத்மநாதனைக் கடத்த முயற்சி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 67 வயதுடைய தாயாரான தெய்வானை கத்தி கூக்குரல் இட்டு அயலவர்களை அழைத்ததாகவும் இதனால் கடத்த முயன்றவர்கள் தாம் பெற்றா காவற்துறையை சேர்தவர்கள் என அறிமுகப்படுத்தி உள்ளார்கள் எனவும் தெரிய வருகிறது.
பிடிவாத குணம் கொண்ட தாயார் மகனுடன் தானும் பெற்றா காவற்துறைக்கு வருவதாக அடம்பிடித்துள்ளார். இதேநேரம் தெய்வானையில் கூக்குரல் கேட்டு சென்ற அயலவர்கள் பெற்றா காவற்துறைக்கு போன் செய்து பத்மநாதனை யாரோ கடத்துவாக முறையிட்டிருக்க்pறார்கள்.
ஸ்தலத்திற்கு உடனடியாகவே சென்ற பெற்றா காவற்துறையினர் கடத்த முயன்றவர்களுடன் உரையாடி உள்ளனர். இதன் பின்னர் கடத்த முயன்றவர்கள் வானில் ஏறிச் சென்று விட்டனர்.
அந்த வெள்ளை வானின் இலக்கம் 57-0662 ஆகும். இது குறித்து ஆட்டுப்பட்டித் தெருவிலுள்ள காவற்துறையிலும் இவர்கள் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளனர். நடுவிலான் தெய்வானையின் மகளான நடுவிலான் சரஸ்வதி (31) இவ்வாண்டு ஏப்ரல் 29ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.
இது குறித்தும் பெற்றா காவற்துறையில் தாயார் முறைப்பாடு ஒன்றை ஏற்கெனவே செய்துள்ளார். அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் எதுவும் இதுவரை இவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் இவர்கள் இந்த லொட்ஜில் காத்திருக்கும் வேளையிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

No comments:
Post a Comment