* மாத்தறை மாவட்ட எம்.பி. சாகர ரத்நாயக்க நாட்டு மக்கள் பட்டினியால் வாடி வதங்கும்போது அமைச்சர்கள் உல்லாசமாக தமது வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாகர ரத்நாயக்க கூறினார். கம்புறுப்பிட்டியவில் ஐ.தே.க. அலுவலகத்தை திறந்துவைத்து பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர் உலகில் 107 அமைச்சர்களைக் கொண்ட ஒரே நாடு இலங்கையே. இந்த அமைச்சர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் மக்களின் வாழ்க்கை பற்றித் தெரியாது. இந்த இன்பத்தை அனுபவிக்கவே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சிலர் அரசுடன் இணைந்து அமைச்சர்களானார்கள். சில அமைச்சுக் காரியாலயங்களுக்கு கொழும்பில் மாதம் 30 இலட்சம் ரூபா வழங்கப்படுகிறது. சில அமைச்சர்களின் வாகனங்களுக்கு மாதம் 4 இலட்சம் ரூபா எரிபொருள் செலவுகள் ஏற்படுகின்றன. எரிபொருள் விலையைக் கண்மூடித்தனமாக அதிகரிக்கச் செய்து விட்டு தங்களது வாகனங்களுக்கு இலட்சக்கணக்கான செலவில் எரிபொருளை நிரப்பிக் கொள்வது சரிதானா? இது யாருடைய பணம் ஏழைப் பொதுமக்களின் பணம் அல்லவா? அன்று எம்மை புலி என வர்ணித்தோர் புலிகளுடன் நாம் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறியோர் புலிகளுடன் எவ்வாறு ஒப்பந்தம் செய்ததை மங்கள சமரவீர எம்.பி. வெளியிட்டது இன்றைய ஆட்சியாளர்கள் ஏன் மறந்துவிட்டனர்? மேலும் மங்கள அதனை விபரிக்கத்தான் இருக்கிறார். தென் மாகாண எதிர்க் கட்சித் தலைவரும் மாத்தறை மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளருமான ஜஸ்டின் கலப்பத்தி உரையாற்றும் போதே கூறியதாவது; "?நாடு மிகக் கஷ்டத்தில் வீழ்ந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியே தலையிட்டு நாட்டைக் காப்பாற்றியது. அன்று ஒரு கிலோ உணவுப்பொருட்களை எடுத்துச் சென்றோர் இன்று 500 கிராமையே எடுத்துச் செல்கின்றனர். 500 கிராமை எடுத்துச் சென்றோர் 250 கிராமையே எடுத்துச் செல்கிறார்கள். இதுதான் இன்றைய நிலை. இந்தத் தோஷங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் மக்கள் ஐ.தே.க.வை ஆதரிக்க வேண்டும் என்றார். இந்த வைபவத்தில் கம்புறுப்பிட்டிய தொகுதி புதிய ஐ.தே.க. அமைப்பாளர் கபில வெல்லப்பிவி உட்பட மற்றும் பலரும் உரையாற்றினர்.
Thursday, 10 July 2008
மக்கள் பட்டினியால் வாடும்போது அமைச்சர்கள் உல்லாச வாழ்க்கை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment