* ஐ.தே.க. எம்.பி.லக்ஷ்மன் செனவிரட்ன கேள்வி வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்புபட்ட கஜநாயக்காவை பிணையெடுக்க இராணுவ உயரதிகாரியொருவர் சீருடையுடன் ஏன் நீதிமன்றத்துக்கு சென்றாரென ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன கேள்வி எழுப்பினார். வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்புபட்ட கஜநாயக்காவை பிணையில் எடுத்தமைக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் தொடர்பில்லையென ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறியபோதே லக்ஷ்மன் செனவிரட்ன இவ்வாறு கேள்வியெழுப்பினார். லக்ஷ்மன் செனவிரட்ன மேலும் கூறுகையில்,; கஜநாயக்காவை பிணையில் எடுத்தமைக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் தொடர்பில்லையென அரசு கூறுகின்றது. அப்படியானால் இராணுவச் சீருடையுடன் நீதிமன்றம் சென்ற இராணுவ உயரதிகாரி ஒருவர் எப்படி கஜநாயக்காவை பிணையில் எடுக்கமுடியும்? பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியாமல் தான் இந்த இராணுவ உயரதிகாரி நீதிமன்றம் சென்று கஜநாயக்காவை பிணையில் எடுத்தாரா? அரசு பொய் கூறித் தப்பிக்கொள்ளப் பார்க்கின்றது என்றார். இதற்கு பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, கஜநாயக்காவுக்கு பிணை கொடுத்தமை தொடர்பில் ஐ.தே.க.நீதிமன்றிடம் தான் கேட்கவேண்டும் என்றார்.
Thursday, 10 July 2008
வெள்ளைவானுடன் தொடர்புபட்ட கஜநாயக்காவை பிணையெடுக்க இராணுவ அதிகாரி நீதிமன்றம் சென்றதேன்?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment