Friday, 25 July 2008

வீடுகளில் தங்கியிருப்போர் தொடர்பான தகவல்களை வழங்காத 7 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

வீடுகளில் தங்கியிருப்போர் தொடர்பான முழுமையான தகவல்களை வழங்காத 7 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியைச் சேர்ந்த 7 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நரஹேன்பிட்டி காவற்துறையினரால் குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக இன்றைய தினம் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: