Friday, 25 July 2008

கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதை புலிகளின் தலைவரால் தடுக்க முடியாது கூறுகிறார் - கருணா

கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதை விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனினால் தடுக்க முடியாது எனவும் தமது அதிகார பிரதேசத்தை பாதுகாத்து கொள்ளும் நோக்கிலேயே சார்க் மாநாட்டை முன்னிட்டு, போர் நிறுத்தம் ஒன்றை விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர் எனவும் கருணா தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் மிகவும் தளர்வடைந்துள்ளனர் எனவும் முன்னர் கிளிநொச்சியை தற்கவைப்பதற்காக தான் கிழக்கில் இருந்து 2 ஆயிரம் பேரை வன்னிக்கு அழைத்துச் சென்றதாகவும் அதன் மூலம் பிரபாகரனை காப்பற்றியதாகவும் கருணா கூறியதாக சிங்கள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் தற்பொழுது அவர்களுக்கு உதவகூடிய படையை கொண்டு வரமுடியாத நிலையில் விடுதலைப்புலிகள் இருக்கின்றனர்.

பதுங்குகுழிக்குள் இருந்து கட்டளைகளை மாத்திரம் பிறப்பிக்கும் பிரபாகரன் ஒருபோதும் மோதல்களில் ஈடுபடவில்லை என்றும் கருணா தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தமது ரி.எம்.வி.பி கட்சி படையினருக்கு உதவிகளை வழங்கும் எனவும் விடுதலைப்புலிகளின் இயலாமை ஒருதலைப்பட்மான இந்த போர் நிறுத்த அறிவிப்பின் மூலம் தெரியவருவதாகவும் தற்போது தாக்குதல்களுக்கு பதிலாக தம்மை தற்காத்து கொள்ளும் வழிமுறைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

No comments: