Friday, 25 July 2008

மகிந்த திட்டியதை அடுத்து ஜனாதிபதியின் செயலாளர் கவலையில் இராஜினாமா?

ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தமது பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவி விலகுவதற்கான காரணி இதுவரையில் வெளியிடப்படவில்லை என ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் செயலாளர் லலித் வீரதுங்கவை கடுமையாக திட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக ஜனாதிபதி செயலாளர் அதிருப்தியுடன் பணியாற்றி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments: