Friday, 25 July 2008

மகிந்தவின் அழைப்பைப் பிரபல ஹிந்தி நட்சத்திரம் ஷாருக்கான் நிராகரித்துள்ளார்

15 ஆவது சார்க் மாநாட்டின் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பைப் பொலிவூட்டின் பிரபல ஹிந்தித் திரைப்பட நட்சத்திரம் ஷாருக்கான் நிராகரித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக தாம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாதென ஷாருக்கான் அறிவித்துள்ளார்.

ஷாருக்கானைக் குறித்த கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வைப்பதற்காக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியையும் சார்க் கலாச்சார நிகழ்வு ஏற்பாட்டுக்குழு நாடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இணைப்பதிகாரி சஜித் வாஸ் குணவர்தன சார்க் மாநாட்டின் கலாச்சார நிகழ்வுகளைப் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்.

No comments: