Friday, 25 July 2008

புலமைச் சொத்து திருட்டு விமல் வீரவன்சவின் நூலுக்குத் இடைக்கால தடை

ஜே.என்.பி. கட்சியின் தலைவரும், முன்னாள் ஜே.வி.பி.யின் பிரசார செயலாளருமான விமல் வீரவன்சவின் ‘பொய்க்கு பதிலாக உண்மை’ என்ற நூலுக்கு வர்த்தக நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.


குறித்த புத்தக வெளியீடு, விநியோகம் மற்றும் விற்பனை போன்ற எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக் கூடாதென நீதிமன்றம் அறிவித்துள்ளது.


ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மற்றும் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோர் வர்த்தக நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி.யின் மத்திய செயற்குழுவிற்கு சொந்தமான ஆவணங்களை சட்டவிரோதமாக களவாடி விமல்வீரவன்ச தனது நூலின் உட்கிடக்கையாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

விமல் வீரவன்ச புலமைச்சொத்து திருட்டுச் செயலில் ஈடுபட்டுள்ளதாக சோமவன்சவும், ரில்வின் சில்வாவும் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி வரை குறித்த தடையுத்தரவு அமுலில் இருக்குமென வர்த்தக நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments: