40 லட்சம் அல்ல 80 லட்சம் பேர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டாலும் ஆயிரம் ரூபாவிற்கு மேல் சம்பள உயர்வை வழங்க முடியாதென அமைச்சர் தி.மு. ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கண்டிக் கிளைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய செலவுடன் மிக முக்கியமான யுத்தமொன்றை முன்னெடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் சம்பள உயர்வுகளைக் கோருவது நியாயமற்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment