பொத்துவில் கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் வைத்து புலிகளின் சூட்டுத் தாக்குதலுக்குள்ளான விமானப்படையின் பெல் 412 ரகத் தாக்குதல் ஹெலிகொப்டரின் எரிபொருள் தாங்கியினுள் எல்.எம்.ஜி. துப்பாக்கிக் குண்டு இருந்ததாக அதற்கான திருத்த வேலைகளை மேற்கொண்ட இராணுவ பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அறுகம்குடாவில் புதிய பாலத்தைத் திறந்து வைக்கும் விழாவுக்காக ஜனாதிபதி சென்றடைந்த வேளையில் அவருக்கான பாதுகாப்பைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் பறந்துகொண்டிருந்த மேற்படி பெல் 412 தாக்குதல் ஹெலிகொப்டர் அம்பாறை விமானப்படை முகாம் பக்கமாகப் பறந்து கொண்டிருந்தபோதே புலிகள் இயக்கத்தினரின் சூட்டுத்தாக்குதலுக்குள்ளாகியதாக விமானப்படைத்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. திவயின: 03.07.2008
கடந்த 01 ஆம் திகதி இவ்வாறு புலிகளின் தாக்குதலுக்குள்ளாகிய ஹெலிகொப்டருக்கான திருத்த வேலைகள் அன்று மாலை தொடக்கம் மறுநாள் 02 ஆம் திகதி வரை செய்யப்பட்ட பின்னர் சேவையிலீடுபடுத்தப்பட்டதாக விமானப்படை சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவர் பத்திரிகைத் தரப்புக்குக் கூறியுள்ளார்.
மேலும், புலிகளினால் இவ்வாறு எல்.எம்.ஜி. துப்பாக்கியால் சுடப்பட்ட வேளையில் ஹெலிகொப்டர் வானத்தில் சுமார் ஆயிரம் அடிக்கு மேற்பட்ட உயரத்தில் பறந்துகொண்டிருந்ததாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஹெலிகொப்டரைச் செலுத்திவந்த விமானப்படைச் விமானி தெரிவிக்கையில்; புலிகளின் சூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து எரிபொருள் பற்றி எரிவதை கண்டதாகவும் அறுகம்குடா முஸ்லிம் வித்தியாலய விளையாட்டரங்கில் ஹெலியை இறக்கியதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு விமானியின் திறமையாலேயே ஹெலிக்கொப்டருக்கும் பயணத்தவர்களுக்கும் ஏற்படவிருந்த பெரும் ஆபத்தைத் தவிர்க்க முடிந்ததாக விமானப்படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
Saturday, 5 July 2008
ஆயிரம் அடிக்கு மேற்பட்ட உயரத்தில் பறந்துகொண்டிருந்த ஹெலியின் எரிபொருள் தாங்கியினுள் புலிகளின் எல்.எம்.ஜி. குண்டுகள்!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment