Friday, 25 July 2008

தோசம் நீங்க யானையின் கீழ் புகுந்த யுவதி சிக்கினார்

யானையின் கீழ் புகுந்து வந்தால் தன்னைப் பிடித்துள்ள தோசம் நீங்குமென நம்பிய யுவதியொருவர் யானையின்கீழ் புகுந்து வர முயன்ற வேளையில் அது கலவரமடைந்து வெகுண்டடித்ததில் யுவதி யானையின் வயிற்றின்கீழ் சிக்கித் திணறிய சம்பவம் கண்டி நாகதேவாலய வளவில் இடம்பெற்றுள்ளது.

தோசம் பிடித்தால் அதிலிருந்து விடுபட யானையின் வயிற்றின் கீழ் பக்கமாக நுழைந்து மறுபுறமாக வந்தால் அது நீங்குமென்ற நம்பிக்கை சிலரிடையே இருந்து வருகிறது.

இதற்கு ஏற்பவே யுவதியும் இவ்வாறு நுழைய முற்பட்டு யானையின் வயிற்றின் கீழ் சிக்கியுள்ளார்.

இதன்போது யானையைக் கட்டுப்படுத்தத பாகன் பெரும் முயற்சியெடுத்தும் பயனளிக்கவில்லையென்று தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் ஒருவாறு யுவதி யானையின் அடிப்பாகத்திலிருந்து மீட்கப்பட்டு அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உட்பட்ட நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது இவ்விதமிருக்க யானையின் வயிற்றுப்பக்கத்தால் நுழைந்து மறுபக்கம் வருவதற்காக யானைப்பாகனால் கட்டணம் அறிவிடப்பட்டுள்ளது. இதன்படி சிறுவர்களுக்கு பத்து ரூபாவும், பெரியவர்களுக்கு 25ரூபாவும் அறிவிடப்பட்டுள்ளது.

No comments: