Friday, 25 July 2008

பிரான்சில் துப்பாக்கி சூடு! இலங்கை தமிழ் இளைஞர் ஆபத்தான நிலையில்

பிரான்ஸின் புறநகர் பகுதியான சார்ஷல் எனுமிடத்தில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த தாஸ் எனப்படும் தமிழ் இளைஞர் ஒருத்தர் வயித்தில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மேலும் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது..

மேற்படி பிரதேசத்தில் உள்ள பூங்காவொன்றில் மதுபானம் அருந்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்தவர்களிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்ததாகவும் அதைத் தொடர்ந்து பலராலும் ஈரோஸ் குகன் என அறியப்பட்ட நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

No comments: