துறைமுகத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன. தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேசும் ஊழியர்கள் தண்டிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
கொழும்பு கோட்டையிலுள்ள காண்மணிக்கூட்டு கோபுரத்தின் கீழ் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றும் ஜாதிக சேவக சங்கத்தின் தலைவர் உதேனி களுதந்திரி இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது:-
துறைமுகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடாதவாறு கண்காணிக்கப்படுகின்றனர். தொழிற்சங்கவாதிகளுடன் பேசினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொழிற்சங்க அடக்குமுறையை நாம் வன்மையாகக் கண்டிருக்கிறோம். எமது கோரிக்கை நிறைவேறும்வரை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரப் போகிறேன்.

No comments:
Post a Comment