Thursday, 3 July 2008

ஐ.நா. விமானங்களை இலங்கையில் பயன்படுத்த அரசாங்கம் அனுமதி

உலக உணவுத் திட்டம் ஐ.நா. விமானங்களை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முதல் தடவையாக அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா. வின் உலக உணவுத் திட்டம் (WFP) தனது பணிகளுக்காக ஐ.நா.வின் மனிதாபிமான விமான சேவை விமானங்களை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தாமதமின்றி உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்காக ஐ.நா. விமானங்களை பயன்படுத்த உலக உணவுத் திட்டம் அனுமதியை கோரியிருந்ததாகவும் அதற்கு அரசாங்கம் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: