கிழக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ள???,
வெளிநாட்டு நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகளை பேணக் கிழக்கு மாகாணசபைக்கு அனுமதி வழங்கப்படவேண்டும்
எனத் தமது கட்சி, இலங்கை அரசாங்கத்திடம் கோரவிருப்பதாகவும் அசாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரான்சிலிருந்து சென்றுள்ள பிள்ளாயானின் ஆலோசகராக செயற்படும் ஞானம் என்பவரும் அவுஸ்ரேலியாவிலிருந்து சென்றுள்ள பிள்ளாயானின் பிரத்தியேக செயலாளராக செயற்படும் ரகு என்ற கோகுலனும் சேர்ந்து சில வியாபார முதலீடுகளையும், நிலையான சொத்துக்கள் வாங்குவதற்கும் என பிள்ளாயானிடம் பணம் பெற்றுள்ளார்கள் என்று தெரிகிறது.
தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா பிரான்ஸ் வந்து லண்டன் சென்றதாகக் கூறப்படுவதற்கும் கருணாவின் நிதி பரிமாற்றங்களுடன் தான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஆரம்பத்தில் மறுத்திருந்தவர் இந்த ஞானம் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதேவேளை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அனைத்துக்கட்சி மாநாட்டுக்காக, பிள்ளையான் அணியில் இருந்து பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரனே இந்தப் பிரதிநிதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த மாநாட்டில் தமது கட்சி, அரசியலமைப்பின் 13 வது சரத்து முழுமையாக அமுல்செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தவுள்ளதாகக் கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment