Thursday, 3 July 2008

ஜே.வீ.பீயின் தொழிற்சங்க நடவடிக்கை நாட்டை இக்கட்டில் தள்ளும்--அனுரபிரியதர்ஸன யாப்பா

அரசாங்கப்படையினர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியை பெற்று வரும் நிலையில், ஜே.வீ.பீயின் தொழிற்சங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி பணிப் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது நாட்டை இக்கட்டில் தள்ளும் நடவடிக்கை என ஊடகதுறை அமைச்சர் அனுரபிரியதர்ஸன யாப்பா குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் ஜே.வீ.பீயின் இந்த நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார்.

ஜனாதிபதியை யுத்தத்தை நோக்கி இட்டுச் சென்றது தாமே என ஜே.வீ.பீயின் தலைமைத்துவம் பகிரங்கமாக கூறியதுடன் போர் வெற்றிகளுக்கு தாமே உரிமை கோரியும் வந்தனர்.

விமல் வீரவன்ஸ தரப்பினர் கட்சியில் இருந்து செல்லும் வரை யுத்தத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டில் ஜே.வீ.பீயினர் இருந்தனர்.

இதனால் வாழ்க்கை செலவு அதிகரிப்பு எதிராக உழைக்கும் மக்களை போராட்டங்களில் ஈடுபடுத்துவதையும் தவிர்த்து வந்தனர்.

இந்த நிலையில் அப்போது அரசாங்கத்தின் யுத்த நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு எதிராக குரல் கொடுத்தவர்களை ஜே.வீ.பீயினர் விடுதலைப்புலிகள் என முத்திரை குத்தினர்.

எது எப்படி இருந்த போதிலும் வடக்கில் படையினர் விடுதலைப்புலிகளை தோற்கடித்து வரும் போது, ஜே.வீ.பீயினர் ஏற்பாடு செய்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையானது, படையினரின் வெற்றிக்கு எதிரானதும், நாட்டை இக்கட்டில் தள்ளும் முயற்சி எனவும் அமைச்சர் அனுரபிரியதர்ஸன யாப்பா குறிப்பிட்டார்.

No comments: