சண்டே லீடர் ஆங்கில செய்திதாளுக்கு எதிராக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச, தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்வதற்கான திகதியை கல்கிஸ்ஸை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2007 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதியும், செப்டம்பர் 2 ஆம் திகதி சண்டேலீடரில் வெளியான தகவல், தமது பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாக தெரிவித்தே கோட்டாபய இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதற்காக அவர் சண்டே லீடர் செய்திதாளிடம், 1000 மில்லியன் ரூபாய்களை நட்டஈடாக கோரியுள்ளார். 1971 ஆம் 1972 ஆம் ஆண்டுகளில் தாம் இராணுவ லெப்டினன்ட் தரத்தில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லாத ஒருவராக இருந்ததாக கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தமது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், பாவனைக்கு ஒவ்வாத வானூர்திகளை 2006 ஆம் ஆண்டு இறக்குமதி செய்ததாக செய்திதாளில் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக கோத்தாபய குறிப்பிட்டுள்ளார்.
தாம் சுயமாகவே அமரிக்காவுக்கு சென்று குடியேறியதாக தெரிவித்துள்ள அவர் நாட்டுக்கு சேவை செய்யவேண்டும் என்பதற்காக, தமது சகோதரரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தம்மை அழைத்து பாதுகாப்பு செயலர் பதவியை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
Friday, 25 July 2008
சண்டே லீடாருக்கு எதிரான பாதுகாப்பு செயலரின் மனு விசாரணைக்கு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment