ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு இடைநிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி பயிலும் வறிய மாணவர்களின் போஷாக்கினை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றது. இதனை சமைத்துக் கொடுப்பதற்கும் மற்றும் இதர செலவுக்குமாக வழங்கப்படும் நிதி கடந்த எட்டு மாதங்களாகியும் இதுவரையில் வழங்கப்படவில்லை. இதனால் தொடர்ந்து மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்ட நிறுவனத்தினால் நிதி திறைசேரிக்கு வழங்கப்பட்ட போதும் திறைசேரி மாவட்ட அலுவலகத்திற்கு வழங்காமையினால் மாவட்டத்தில் உள்ள வலயக் கல்வி அலுவலகங்களுக்கு நிதி சென்றடையவில்லை. இதனால் இத்திட்டத்தை முன்னெடுப்பதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சில பாடசாலைகளில் மாணவர்களின் நலன் கருதி அதிபர்கள் தங்களின் சொந்த பணத்தை செலவு செய்து உணவு வழங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களுக்கான உணவு வழங்கப்படாத பட்சத்தில் மாணவர்களின் போஷாக்குத்தன்மை குறைவடைவதுடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவடையும் என பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றார்கள்.
Wednesday, 2 July 2008
மட்டக்களப்பில் வறிய மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு திடீரென்று இடைநிறுத்தம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment