Sunday, 6 July 2008

மகிந்த எதிர்கொண்டுள்ள நெருக்கடி

சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி என்றுமில்லாத அளவு உயர்ந்துவிட்டது. போரில் சிங்களம் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டதன் விளைவை


இப்போது மெல்லமெல்ல அனுபவிக்க தொடங்கிவிட்டது.
இதுவரையும் சிறிலங்கா மக்களிற்கு பொய்யான தகவல்களைக் கூறி அரசபோக அதிகாரங்களைத் தக்கவைத்துக் கொண்டனர். மகிந்தவும் அவரது கூட்டாளிகளும் சிறிலங்காவின் பொருளாதா வீழ்ச்சி என்பது எதிர்காலத்தில் தூக்கி நிறுத்த முடியாத வொன்றாக இன்று வீங்கிப்போயுள்ளது. என்பதை இது காட்டுகிறது.

விலைஉயர்வு பொருளாதார வீழ்ச்சி இவ்வளவு மோசமடைந்து போனதற்கு அரசுடன் ஜே.வி.பி.அமைப்பும் பொறுப்போற்றுக்கொள்ள வேண்டும் அதனையே இது உணர்த்தி நிற்கிறது. ஜே.வி.பி. அமைப்பு தொழிற்சங்கங்களை தனது பிடிக்குள் வைத்திருந்தது. தொழிற்சங்கப் போராட்டம் வெடித்த நேரத்தில் அதனை ஜே.வி.பி.அடக்கி வைத்திருக்கிறது.

அதற்கு மூலகாரணம் மகிந்த அரசு கவிழ்ந்துபோகாமல் இருக்கவே இவ்வாறான போராட்டங்கள் தலையெடுக்காமல் பார்த்துக்கொண்டு மகிந்தவை மறைமுகமாக ஆதரித்திருக்கின்றன.

ஜே.வி.பி தடுத்தாலும் கோட்கமுடியாது என இத்தொழிற்சங்கங்கள் சந்திக்கு வந்துவிட்டன. தொழிற் சங்கசம்மேளனங்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் எதிர்வரும் 10ம் திகதி பணிப்புறக்கணிப்பில் குதிக்கவுள்ளன. இது நிச்சயமாக அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தப்போகிற பிரச்சினையே என்பதில் ஐயம் கொள்ள தேவையில்லை.

சப்ரமுவமற்றும் வடமத்திய மாகாண சபைத்தேர்தல்கள் வரும் நிலையில் இத்தகைய தொழிற்சங்கப் போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தொழிற்சங்கப் போராட்டங்களை அரசு அடக்குமா அல்லது தீர்வு காணுமா? அல்லது இதுவே முற்றி அரசு கவிழுமா என்பதை அடுத்து வரும் காலம் உணர்த்தப்போகிறது. தொழிற்சங்கப் போராட்டதரப்பு மாதம் 5000 ரூபா சம்பள உயர்வு கோருகிறது. இதனை ஈடுசெய்ய அரசால் முடியுமா?

ஏற்கனவே உணவு மற்றும் நுகர்வுப்பொருட்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி விட்டதால் பொதுமக்களின் எதிர்பார்ப்பை அரசு சம்பாதித்திருக்கிறது. இதனை அரசு அவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது. இதற்கான திட்டம் அரசிடம் இருப்பதாக தெரியவில்லை.

அரசின் பொருளாதாரத் தோல்வி ஒருபுறமும் போரின் தோல்வி மறுபுறமும் எதிர்கொள்ளப்பட்டுள்ள சிறிலங்கா எவ்வாறு அரச ஊழியர்களின் கோரிக்கையையும் பொதுமக்களின் முறைகளையும் தீர்த்துவைக்கப் போகிறது.

என்பதுவே இன்றுள்ள கேள்வி இதனை பொருட்டாக அரசு எண்ணாது போனால் ஆட்சிக்கு ஆபத்து என்பது வெகுதூரத்தில் இல்லை.
கலி

No comments: