ஜி-8 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் மாநாட்டுக்கான எதிர்ப்பாளர்களும் குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹொக்கைடோ நகரின் சப்போராவிலுள்ள டயாகோவில் உச்சி மாநாடு நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. ஜி-8 மாநாடு நடைபெறவுள்ள இடத்திற்கு அருகிலுள்ள இடமான சப்போராவில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் எதிர்ப்பாளர்களும் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் அசம்பாவிங்கள்; நடைபெறுவதை தடுக்கும் வகையிலும் உச்சி மாநாட்டை அமைதியாக நடத்தி முடிக்கும்; பொருட்டு 21 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் நடைபெற்ற ஜி-8 நாடுகளின் உச்சிமாநாடுகளிலும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் அதேவேளை, கடந்த ஆண்டில் ஜெர்மனியில் நடந்து முடிந்த ஜி-8 மாநாட்டின்போது ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இவற்றினைக் கவனத்தில் கொண்ட ஜப்பான் அதிகாரிகள், 19 தென் கொரியர்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்துள்ளதுடன் ஏனையவர்களை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதேவேளை இந்த நடவடிக்கைகள் குறித்து கொரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இத்தகைய அடக்குமுறைகளை கண்டு அஞ்சி பின்வாங்கமாட்டோமென்றும அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் வன்முறைக்கு இடமளிக்ககூடாதென ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சப்பாரோ பேரணி ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள்ளொன்றை விடுத்துள்ள நிலையில்,
1 comment:
what for Mayirandi,Bush is coming there?
Post a Comment