Sunday, 20 July 2008

கொழும்பு நகரத்தின் பாதுகாப்பை தாம் பொறுப்பேற்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது – றாவய

இலங்கையில் நடைபெறவுள்ள ‘சார்க்’ மாநாட்டின் போது இந்திய பிரதமர் பங்கேற்கும் நாட்களில் கொழும்பு நகரத்தின் பாதுகாப்பை தாம் பொறுப்பேற்க வேண்டும் என இந்தியா, இலங்கைக்கு அறிவித்துள்ளதாக ‘ராவய’ சிங்கள செய்திதாள் தெரிவித்துள்ளது.


இதனையடுத்து இந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ராவய குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டு புலனாய்வுத்துறையினரின் தகவல்களின் அடிப்படையிலேயே ‘சார்க்’ மாநாட்டுக்கு வரும் இந்திய பிரதமருக்கும், ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதிக்கும் விசேட பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.


இதற்கிடையில் முன்னர் கொழும்பி;ன் புறநகர் கல்கிஸ்ஸையில் அமைந்துள்ள, விருந்தகத்தில் மாநாட்டு விருந்தினர்களை தங்கவைக்கும் நடவடிக்கைகள், கைவிடப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து கல்கிஸ்ஸைக்கான போக்குவரத்தின் போது முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தமுடியாமல் இருக்கும் என்ற காரணத்திற்காகவே இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

No comments: