Sunday, 20 July 2008

காத்தான்குடியில் இயங்கும் புதிய முஸ்லிம் அமைப்புடன் பிள்ளையானுக்கு தொடர்பு - பிள்ளையானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

காத்தான்குடி பிரதேசத்தில் மீண்டும் பயில்வான்களின் விசுவாசிகளின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமென்று நடைபெற்றது.


காத்தான்குடி பிரதேசத்தில் அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையில் இயங்கி வந்த பயில்கானின் கொள்கையை பின்பற்றும் இஸ்லாத்துக்கு முற்றிலும் எதிரான தரீக் கதுல் முப்லிஹீன் காரியாலயம் சட்டத்தை மீறி நிர்மாணிக்கபட்டுள்ளது என்று காத்தான்குடி நகரசபை உட்பட பிரதேச அனைத்தும் சமய, சமூக அமைப்புக்கள், நிறுவனங்கள் வழக்கு தாக்கல் செய்தது.


இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இக்கட்டத்தை தகர்த்ததுடன் பயில்வானின் சடலமும் அகற்றபட்டது.

இச் சம்பவத்தின் போது காத்தான்குடி பிரதேச வாசிகள் மூவர் உயிரிந்தமையும் குறிப்பிடபட்டது.

இந்நிலையில் பயில்வானின் விசுவாசிகள் சிலர் கடந்த வருடமும் அவரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும், கந்தூரிவழங்க வேண்டும் எனக்கோரியும் நீதிமன்ற அனுமதி கோரி காத்தான்குடிக்கு வருகைதர முயற்சித்த போதும் காத்தான்குடியில் மீண்டும் களேபரளம் ஏற்படும் நிலைதோன்றிகாத்தான்குடியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.


இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் பயில்வானின் விசுவாசிகள் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் உடைக்கபட்ட தரீக்காவை பார்வையிட்டு விட்டுசென்றனர்.

கிழக்கு முதலமைச்சரே பயில்வானின் வருகைக்கு இடமளிக்க வேண்டாம்,இஸ்லாத்துக்கு எதிராக செயற்படும் பயில்வானின் விசுவாசிகளுக்கு உதவுவதை நிறுத்துங்கள்.


மீண்டும் களேபரத்துக்கு இடமளிக்க வேண்டாம் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு ஆர்பட்டத்தில்

No comments: