* விஜய டி.ராஜேந்தர் சீற்றம்
தமிழக மீனவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக அரசு பாதகம் செய்துவிட்டதென இலட்சிய தி.மு.க. பொதுச் செயலர் விஜய டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய டி.ராஜேந்தர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது;
இலங்கை தமிழர்களும் தமிழக மீனவர்களும் அநியாயமாக சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். பா.ம.க.வினர் கூட குரு பிரச்சினைக்காக பிரதமரை நேரில் சந்திக்கின்றனர்.
அவர்களுக்கு இருக்கும் தைரியம் கூட தி.மு.க.வுக்கு இல்லை. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்குப் போட மாட்டோம் என்று அறிவிக்க வேண்டியதுதானே?
இலங்கை தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இத்தனை நாள் பாதகம் செய்துவிட்டு உண்ணாவிரத நாடகம் போடுகின்றனர். விலைவாசி ஏற்றத்தால் மக்கள் தெருக்கோடிக்கு வந்துவிட்டனர். ஆனால்,
எம்.பி.க்களின் விலையோ பல கோடி. தொடர் மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிறுதொழில்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டன. மக்கள் படும் கஷ்டங்களைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மத்திய அமைச்சரின் மகன் பக்கத்து மாநிலத்தில் 5,000 ஏக்கர் நிலம் வாங்கி இருப்பதாக காற்றுவழி செய்தி. சென்னையில் நடக்கும் தொடர் கொலைகளால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். பொலிஸ்காரர்களால் கொலையாளி யார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.
No comments:
Post a Comment