Sunday, 20 July 2008

நிமால் சிறிபால டி சில்வாவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்?

பாராளுமன்றத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்ட சுகாதார அமைச்சரும், அவைத் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வாவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றன.


இந்திய படையினரோ விமானங்களோ சார்க் மாநாட்டின் போது இலங்கையில் கடமையில் ஈடுபடுத்தப்படாதென அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.


எனினும், இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு இந்திய விசேட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும், இலங்கை வான் மற்றும் கடற்பரப்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


எனவே, ஜனநாயகத்தின் அதி உயர் பீடமாக மதிப்படும் பாராளுமன்றத்தையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் தவறான வழியில் இட்டுச் சென்ற அவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானமொன்றை நிறைவேற்றுவது குறித்து எதிர்க்கட்சிகள் கலந்தாலோசித்து வருவதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: