Sunday, 20 July 2008

விசேட அதிரப்படையினருக்கான தாக்குதல் வாகனக் கொடுக்கல் வாங்கல்களில் பாரிய நிதி மோசடி அம்பலம்!!!

காவற்துறை விசேட அதிரப்படையினருக்கு தாக்குதல் வாகனங்களை கொள்வனவு செய்த சந்தர்ப்பத்தில் பாரியளவு நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆயுதப் படையினரின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் ஐந்து ட்ரக் வண்டிகள் பிலிப்பைன்ஸிலிருந்து 25 கோடி ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கொடுக்கல் வாங்கல்களின் மூலம் சுமார் 13 கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவற்துறை விசேட அதிரடிப்படை உயர் அதிகாரிகளினால் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ரக ட்ரக் வண்டிகளை சுமார் இரண்டு கோடி ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள முடிந்த போதிலும் காவற்துறை விசேட அதிரடிப்படை உயர் அதிகாரிகள் நான்கரை கோடி ரூபா செலவிட்டு ட்ரக் வண்டிகளை கொள்வனவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிதி மோசடி குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்???.

No comments: