Sunday, 20 July 2008

புதிய மகிந்த சிந்தனையால் பாதிக்கப்படும் புலம்பெயர் இலங்கை தொழிலாளிகள் --ஏழு பொருட்களுக்கு வரிச்சலுகை நீக்கம்

வெளிநாடுகளில் குறிப்பிட்ட காலம் இருந்தவர்கள் நாடு திரும்பும் போது கொண்டு வரும் பொருட்களுக்கு வழங்கப்பட்டிருந்த வரிச்சலுகையை அரசாங்கம் நீக்குவதற்கு உத்தேசித்துள்ளது.

ஏழு பொருட்களுக்கான வரிச்சலுகை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நீக்கப்படவுள்ள தாக சுங்க திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி 29 மற்றும் 32அங்குல தொலைக்காட்சிப்பெட்டிகள், குளிரூட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள்,

தன்னியக்க சலவை இயந்திரங்கள், ரெபிரிஜிரேடர்கள், நான்கு அடுப்புகளை கொண்ட கேஸ் அடுப்புகள் ஆகிய பொருட்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வரிச்சலுகை நீக்கப்படவுள்ளது. வெளிநாடுகளில் குறிப்பிட்ட காலம் இருப்பவர்கள் நாடு திரும்பும் போது ஆயிரத்து ஐந்நூறு டொலர் பெறுமதியான பொருட்களை கொண்டு வருவதற்கு வரி விதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் குறிப்பிட்ட பொருட்களை எடுத்து வந்தால் அதற்கு வரி விதிக்கப்படும் என சுங்கப்பகுதியினர் தெரிவித்தனர்.

No comments: