Saturday, 5 July 2008

சொகுசு வாழ்வை இழக்க அமைச்சர்கள் தயாரில்லை

அமைச்சர்களாக உள்ளவர்கள் இரண்டு அமைச்சுப் பொறுப்புக்களை கொண்டிருந்தால் அதில் ஒன்றில் இருந்து விலகவேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச,கடந்த வாரம் அனைத்து அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் இதனை பல அமைச்சர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். அரசாங்கத்தின் அமைச்சரவையின் அளவை குறைக்குமாறு எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்தநிலையில் இரண்டு அமைச்சுப்பொறுப்புகளை கொண்டுள்ள அமைச்சர்களை ஒன்றை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனையவற்றை விட்டுக்கொடுக்குமாறு ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, கடந்த வாரம் அமைச்சர்களுக்கு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளார்.

எனினும் இந்த உத்தரவு ஜனாதிபதியின் ஒன்று விட்ட சகோதரரான சாமல் ராஜபக்ச, மற்றும் ஜி எல் பீரிஸ் ஆகியோருக்கு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தெங்கு அபிவிருத்தி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் சாலிந்த திஸாநாயக்க, தமது தெங்கு அபிவிருத்தித்துறை அமைச்சை வி;ட்டு விலகியுள்ளார்.

எனினும் அமைச்சர்களான மஹிந்த விஜேசேகர, டிலான் பெரேரா போன்றோர் தம்மால் ஒரு அமைச்சை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனையவற்றை கைவிடக்கோரும் உத்தரவுக்கு எதிராக குரல்கொடுத்துள்ளனர்.

இந்த உத்தரவு ஏன், அமைச்சர் சாமல் ராஜபக்சவுக்கும் ஜி எல் பீரிஸூக்கும் விடுக்;கப்படவில்லை என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேவேளை இது அரசாங்க உயர்மட்டத்தி;ன் ஒரு அரசியல் நகர்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: