Saturday, 5 July 2008

நண்பகல் வேளையில் வீட்டில் தனியாக இருந்த பெண் குத்திக்கொலை

* உரும்பிராய் பகுதியில் சம்பவம்

உரும்பிராய் கிழக்கில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வீட்டில் தனிமையிலிருந்த பெண்ணொருவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை நண்பகல் வேளையில் இவரது வீட்டிற்குள் புகுந்தவர்களே இவரைக் குத்திக் கொன்று விட்டு சமையலறைக்குள் உடலைப் போட்டுப் பூட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இரவுக் காவலுக்காக இவரது வீட்டிற்குச் சென்றவர்கள், வீடு பூட்டியிருப்பதை அவதானித்து அதனை உடைத்துத் திறந்து பார்த்தபோது சமையலறைக்குள் அவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்படவே நேற்றுக் காலை அங்கு சென்று சடலத்தை எடுத்துச் சென்று யாழ் ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.

உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த தில்லையம்பலம் வரதலக்ஷ்மி (55 வயது) என்பவரே கொல்லப்பட்டவராவார்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments: