பனாகொடை இராணுவத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ உயர் அதிகாரியொருவரின் அறையில் 5 குண்டு துளைக்காத அங்கிகள் உள்ளிட்ட யுத்த உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ உயர் அதிகாரி தொடர்பில் ஏற்கனவே பல்வேறு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் உயர்மட்டக் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்திற்கு இடமான குறித்த உயர் இராணுவ அதிகாரியின் மனைவி தமிழ் பெண் எனவும், அவர் வெள்ளவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இராணுவ உயர் அதிகாரி மற்றும் அவரது குடும்ப பின்னணி தொடர்பில் தற்போது விசாரணைகள் அரம்பிக்கப்பட்டுள்ளன.
குண்டு துளைக்காத தலைக்கவசம், அங்கிகள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல்வேறு இராணுவ உபகரணங்கள் இராணுவ உயர் அதிகாரியின் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment