கொசோவோ விடுதலை இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை லண்டனில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்ட கொசோவோவின் நகரசபை மேயர் ஒருவர் கலந்து கொண்டுள்ளனர்.
கொசோவோவின் நகரசபை மேயரான பஜ்ரேட் ரெக்செனாய் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்ததனை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனால், அமெரிக்கா, ஜெர்மன், பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்துமீட்கப்பட்ட பல ஆயுதங்கள் மேற்குலக நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டதெனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்குலகத்தைச் சேர்ந்த பல நாடுகள் கொசோவோவிற்கு ஆயுதங்களை வழங்கியிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, 16 July 2008
கொசோவோ விடுதலை இராணுவம் புலிகளுக்கு ஆயுத விநியோம் - திவயின
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment