Sunday, 6 July 2008

எண்ணெய்வள ஆய்வு குறித்து இந்தியாவின் நிறுவனத்துடன் இது ஒரு ரகசிய நகர்வு!!!

மன்னார் வளைகுடா பகுதியில் இருப்பதாக கூறப்படும் எண்ணெய்வள ஆய்வு குறித்து இந்தியாவின் கேயான் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் நாளை கைச்சாத்திடவுள்ளது.

இந்திய நிறுவனத்திற்கான ஆய்வு அனுமதி ரகசியமாக கோரப்பட்ட கேள்வி பத்திரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுக்கான உடன்படிக்கை நெறிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த உடன்படிக்கையில் உள்ள விடயங்கள், இதனால் நாட்டுக்கு ஏற்படகூடிய நன்மைகள், எண்ணெய் வளத்தை கேயான் நிறுவனத்துடன் எவ்வாறு பகிர்ந்து கொள்வது போன்றவை குறித்து வினைத்திறனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள கனிய எண்ணெய்வள ஆய்வுகள் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதாக கூறிய எண்ணெய்வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இந்திய நிறுவனத்துடனான உடன்படிக்கை குறித்து எந்த தகவல்களையும் சபையில் வெளியிடவில்லை என கூறப்படுகிறது.

No comments: