17வது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக அமுலுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை ஜே.வீ.பீ மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதனை வலியுறுத்தும் நோக்கில் எதிர்வரும் 9 ஆம் திகதி கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு எதிரில் மக்களிடம் மகஜர் ஒன்றில் கையெழுத்து பெறப்படவுள்ளது.
இதனை போன்று நாடு முழுவதிலும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜே.வீ.பீ அறிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் நாட்டின் சகல ஜனநாயக நிறுவனங்களையும் செயலிழக்க செய்து, ஜனநாயகத்திற்கு விரோதமான பாதையில் பயணித்து கொண்டிருப்பதாக ஜே.வீ.பீ குற்றம்சுமத்தியுள்ளது.
செயலிழந்துள்ள சுயாதீன காவல்துறை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, அரசியலமைப்புச் சபை போன்ற ஜனநாயக நிறுவனங்கள் செயலிழந்துள்ளன. இந்த ஜனநாயக நிறுவனங்களை செயற்பட வைத்து ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.
Sunday, 6 July 2008
ராஜபக்ஸ அரசாங்கம் நாட்டின் சகல ஜனநாயக நிறுவனங்களையும் செயலிழக்க செய்துள்ளது
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment