Sunday, 13 July 2008

சிங்கள வியாபாரிகள் கொலையின் பின்னனியில் முஸ்லிம் ஆயுதக்குழு

கிழக்கில் சிங்கள வியாபாரிகள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்பில் முஸ்லிம் ஆயுதக்குழுவான ஜிகாத்துக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவான முஸ்லிம் வர்த்தகர்கள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வேளையில் தமிழ் பிரதேசங்களே முஸ்லிம் வர்;த்தகர்களின் வர்;த்தகங்களுக்கு முக்கியத்துவமிக்கதாக உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து லொறிகளில் பொருட்களை கொண்டுவரும் சிங்கள வர்;த்தகர்கள் அவற்றை குறைந்த விலையில் தமிழ்; பிரதேசங்களுக்குள் கொண்டுசென்று விற்பனை செய்துவிட்டு செல்வது வழமை.இதன் காரணமாக தமிழ் மக்களிடமும் இந்த பொருட்களுக்கு நல்லவரவேற்பு உள்ளது.

இதனை உணர்ந்த முஸ்லிம் ஜிகாத் ஆயுதக்குழுவே தமிழ் பிரதேசங்களுக்குள் வைத்து இவ்வாறான படுகொலைகளை புரிவதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இவர்கள் கல்முனை,அக்கரைப்பற்று,மட்டக்களப்பு,வாழைச்சேனை போன்ற பகுதிகளில் இருந்தே அதிகளவில் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்(கொலை) செய்யதுள்ளதாகவும் தெரிவித்த அவர்,

இது தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில் விசாரணை புத்தகத்தில் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் சில உண்மைகள் வெளிக்கொணரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சில முஸ்லிம் பொலிஸாருக்கும் இவ்வாறான முஸ்லிம் ஆயுதக்குழுவுடன் தொடர்பு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் அவர் முரசுக்கு மேலும் தெரிவித்தார்.

No comments: