Sunday, 13 July 2008

சார்க்கில் பேர்வேஸ் முஷாரப் கலந்துகொள்ள மாட்டார்

இலங்கையில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஆகஸ்ட 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் பாகிஸ்தான் ஜனாதிபதி பேர்வேஸ் முஷாரப் கலந்துக்கொள்ள மாட்டார் என இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சார்பில் அந்த நாட்டின் பிரதமர் யூசுப் ராசா கிலியானி கலந்துகொள்வார் எனவும் உயர்ஸ்தானிகம் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானின் அரச தலைவராக முஷhராப் இருந்த போதிலும் பாகிஸ்தானின் அரசாங்க தலைவராக பிரதமரே உள்ளார் எனவும் இதனால் அவர் கலந்துகொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: