Thursday, 10 July 2008

அமைச்சர் மேவின் சில்வா தேசிய வைத்தியசாலை சமையலறை ஊழியர்களால் பானை,அகப்பை சட்டியால் தாக்கப்பட்டார்

mervi-dutugamunu.jpgஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் சந்தித்த அனுபவத்தை போன்ற மற்றும் ஒரு அனுபவத்தை அமைச்சர் மேவின் சில்வா நேற்று மீண்டும் சந்தித்தார்.

மேவின் சில்வா, தேசிய வைத்தியசாலையின் சமையலறைக்கு சென்று அங்குள்ள ஊழியர்களை இன்று நடைபெறவுள்ள, பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளிக்கக்கூடாது என அவர்கள் அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து அந்த ஊழியர்கள் அனைவரும் அமைச்சரை சுற்றிவளைத்து அகப்பை சட்டியால் தாக்கப்பட்டார் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒருவாறு அவர் சமாளித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமைச்சர் மேவின் சில்வாவின் உதவியாளரான கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர்,சமன் அபேகுணவர்த்தன, நேற்று கொழும்பு கண் வைத்தியசாலைக்கு சென்று அங்கு ஊழியர்களை இன்று பணிப்புறக்கணிப்பில் பங்கேற்க்ககூடாது என அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து அவர் ஊழியர்களின் பலத்த எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: