Monday, 7 July 2008

அரசாங்கமும் ஆட்கடத்தல்களில் ஈடுபடுவதை அரசாங்க சமாதானச் செயலகப் பிரதானி ஏற்றுக்கொண்டுள்ளார்


இலங்கையில் இடம்பெறும் ஆட்கடத்தல்களில் அரசாங்கமும் சம்பந்தப்பட்டுள்ளதாக அரசாங்க சமாதானச் செயலகப் பிரதானி ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் கடத்தல்கள் இடம்பெறுவதை ஏற்றுக்கொண்டார்.

ஒரேயடியாக அரசாங்கம் இவ்வாறான கடத்தல்களில் ஈடுபடவில்லை எனக் கூறிவிட முடியாது என அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம், பிள்ளையான் குழு, ஈ பி டி பி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோர் இந்தக் கடத்தல்களில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என ஜனாதிபதி கூறிவரும் நிலையில் அரசாங்க சமாதானச் செயலரின் இந்தக் கருத்து அரசாங்கத்திற்குப் பாரிய சங்கடநிலையை ஏற்படுத்தியுள்ளது.

No comments: