தமிழர்கள் இடம்பெயர்வதைத் தடுக்க வேண்டுமானால் அவர்களுக்கென்று ஒரு நாடு உருவாகும் போதே அது சாத்தியப்படும் என்று எட்டுத் தடவைகள் இடம்பெயர்ந்துள்ளதாகக் கூறும் குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மன்னாருக்குத் தான் குடும்பத்துடன் சில வருடங்களுக்கு முன்னதாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்ததாகவும் பின்னர் கடந்த ஒரவருடத்தில் மட்டும் ஏழுதடைவைகள் மாறி மாறி இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் தம்மைப்போன்று பல குடும்பங்கள் இந்த ஒன்றரை வருடங்களில் மட்டும் மன்னார் பகுதியிலிருந்து பல இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறிலங்காப்படையினர் தொடர்ந்தும் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது எறிகணை வீச்சுக்களை நடத்தி அவர்களை வேரோடு பிடுங்கி எறிகின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தமிழர்களுக்கென்று நாடு அமையாமல் இந்த இடப்பெயர்வுகளைத் தடுக்க முடியாது என்கிற மனநிலையிலேயே தாங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முழங்காவில் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வன்னேரிக்குளத்தில் மரநிழலில் தனது சிறுபிள்ளைகள் அடங்கிய குடும்பத்துடன் தங்கியுள்ள குடும்பஸதர் ஒருவரே இவ்வாறு தெரிவித்தார்.
1 comment:
YES!
Tamileelam will set the answer for all questions-
a new era of Beginning for tamil community around the world!
Post a Comment