தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் இருபது வருடங்களுக்கு அல்லது அதற்கு மேலும் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்று இலங்கை இராணுவத் தளபதி பொன்சேகா கூறியிருக்கிறார், என கொழும்பிலிருந்து வெளிவரும் 'சன்டே லீடர்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
இவ்வருட ஓகஸ்ட் மாதத்துக்குள் விடுதலப்புலிகளை ஒழித்துக் கட்டி விடுவோம் என்று அண்மைக் காலத்தில்தான் ராணுவத் தளபதியும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபயாவும் கூறியிருந்தார்கள்.
இந்தப் பிரச்சினையை அடுத்த தலை முறைக்கு விட்டு வைக்கப் போவதிலைலையென்று இந்த இருவரும் தெரிவித்திருந்தார்கள். என்று இப் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது.
இராணுவத் தளபதியின் கூற்றுப் படி 2006 ம் ஆண்டுக்குப் பிறகு 9,000 க்கும் மேற்பட்ட புலிகளைக் கொன்றோழித்திருக்கிறார்கள். இருந்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கப் போகிறது. இதன் கருத்து என்னவென்றால் இந்த டிசெம்பர் மாதத்ததுக்கு முன் யுத்தம் முடிவுறபப் போவதில்லை.
சாதராணமாகச் சொல்வதென்றால் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டும் நிலையில் இந்த அரசு இல்லை. பிரச்சினை அடுத்த தலைமுறைக்கும் நீடிக்கப் போகிறது என்பதுதான் என்று சன்டே லீடர் எழுதியுள்ளது. அது மேலும் கூறியுள்ளதாவது:
தமிழ்த் தேசியத்தில் நம்பிக்கை வைத்தவர்கள் இருக்கிறார்கள். இன்னும் இருபது வருடங்களுக்கு மேல் சுமார் 1,000 போரளிகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிh வாழக் கூடும். ஆனால் நாங்கள் அதே முறையில் போராடிக் கொண்டிருக்கப் போவதில்லை. கிளாச்சி கலகங்கள் போன்று தொடர்ந்து இது இருக்கத்தான் போகிறது என்று பொன்சேகா பி.பி.ஸி. பேட்டியில் கூறியிருக்கிறார்.
இராணுவ தளபதியின் கருத்தை ஆழமாகப் பார்த்தால் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படாவிட்டால் இனப் போராட்டம் அல்லது கிளர்ச்சி எப்பொழுதுமே நடந்து கொண்டுதான் இருக்கப் போகின்றது. இப்படிக் கூறுவதானது பாதுகாப்பு அமைச்சின் இணையதள வழிகாட்டலின்படி ராஜத்துரோகக் குற்றச்சாட்டாகக் கருதப்பட முடியும்.
அதிகம் போனால் ஒருவருட காலத்துக்;குள் புலிகள் பெரும் பகுதி நிலத்தை இழந்து விடுவார்கள். அது வரைக்கும் நாடடின் பொருளாதாரம் தாக்கு பிடிக்குமா? மக்களின் பொறுமையும் நிலைத்து நிற்மா? அத்துடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச பொறுமை நீடித்து நிற்குமா? என்ற கேள்விகள் எழவே செய்கினறன.
இந்த நிலைமையில் தான், சர்வதேச நாடுகளின் மனித உரிமை மீறல் தொடர்பான அழுத்தங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. போர் தொடருமானால் உரிமை மீறல்கள் அதிகரிப்பதோடு செலவினங்களும் அதிகரிக்கும்.
பொருளாதாரம் மேலும் பாதிக்கபடும். ஏற்கனவே பணவீக்கம் 30 விதத்துக்கு மேல் போய் விட்டது. வெளிநாட்டுச் செலவாணி சேமிப்பு தேய்ந்து கொண்டு போகின்றது.
இந்த நிiமைகள் குறித்து சில அமைச்சர்கள் கவலை கொண்டிருக்கின்றனர். அவர்கள் தனிப்பட்ட முறையில் ராஜதந்திரிகள் மற்றும் நெருக்கமான நலன் விருமபிகளோடும் உரையாடியிருப்பது வெளிப்பட்டு இருக்கிறது.
சர்வதேச சமூகத்துடன் அரசு மேற்கொண்டுள்ள கடுமையான போக்குகளால் அமைதி முயற்சியில் கண்டுள்ள தோல்வி, ஊடகக் கெடுபிடிகள் உட்பட மனித உரிமை மீறல்கள் குறித்து அவர்கள் கவலை கொண்டுள்ளனர். இவை பற்றி மஹிந்தவிற்கும் தெரியவந்துள்ளது.
மஹிந்தவிற்கு நன்றாகத் தெரியும். அவர் இப்போழுது இராணுவத் திட்டத்துக்குள் அடைபட்டுக் கிடக்கிறார். இப்போதைக்கு அதிலிருந்து மீட்சியில்லை.
இந்த உண்மையை அண்மையில் ஜே.வி.பியிலிருந்து வெளியேறிய விமல் வீரவன்ச சரியாகவே சுட்டிக் காட்டியுள்ளார். சண்டையை நிறுத்தினால் அரசுக்கு அதே கதிதான் ஏற்படும் என்று.
சொல்லப் போனால் அரசு போரை நடத்தித்தான் ஆகவேண்டும். பயங்ரவாதத்தை தோற்கடிப்தற்காகவல்ல, அரசு நீடித்து உயிர் தரித்திருப்பதாற்காக.
குற்றம் புரிகின்றவர்களைக் காhப்பாற்றும் கலாச்சாரம் மற்றும் மனித உரிமை மீறல்கள போன்றவை தொடர்பாக தமது வட்டாரததுக்குள்ளேயே குமுறல்கள் தோன்றுவதை அறிந்த மஹிந்த அதற்கு ஒருமுடிவு கட்டும் விதத்தில் கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் முயற்சியெடுத்துள்ளார்.
அது தான் உட்பூசல்கள் பற்றிய தகவல்கள் வெளிவருவதற்கு உதவிபுரிந்துள்ளன.
'சில அமைச்சர்கள் வெளிநாட்டு முக்கியஸ்தர்களை அல்லது துர்துவர்களை சந்திக்கும் போது மனித உரிமைகள் தொடர்பாக எமது தரப்பபை குறை கூறும் விதத்தில் விமர்சனங்கள் செய்வதாக அறிகின்றேன்.
காணாமல் போதல், ஆள் கடத்தல்கள் அதிகரித்திருக்கினறன, ஊடகத்ததுறையும் இம்சைக்குள்ளாவதாகவும், நிலைமை சீராக இல்லையென்றும் தெரிவித்துள்ளர்கள்'. என்று தெரிவிதுள்ள மஹிந்த இப்படிச் செய்யாதீர்கள். உங்களுக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது. நான் பெயர் குறிப்பிடப் போவதில்லை, சம்பந்தப்பட்வர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசவிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி சுடர் ஒளி
Monday, 7 July 2008
தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் இருபது வருடங்களுக்கு அல்லது அதற்கு மேலும் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள் --இராணுவத் தளபதி பொன்சேகா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment