Tuesday, 15 July 2008

காங்கேசன் துறைக்கும் வருகிறது இந்தியா !!!

காங்கேசன் துறை சீமெந்து ஆலையை பார்வையிடுவதற்காக இந்தியாவிலிருந்து 'ஆதித்தியா பிர்லா' என்ற நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர்.

கட்டுமான மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ரஜித இதனைத் தெரிவித்துள்ளார். காங்கேசன் துறைக்குச் செல்வதற்கான பாதுகாப்பு அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க காங்கேசன் துறை சீமேந்து ஆலையை மீண்டும் இயங்கச் செய்வதற்கான திட்டமொன்றை ஏற்கனவே இந்த நிறுவனம் அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனத்துடன் சேர்ந்து காங்கேசன் சீமெந்து ஆலையை மீண்டும் இயக்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.

சீமேந்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதும் யாழ் குடா நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதுமே இதன் நோக்கம் எனவும் அமைச்சர் கூறினார்.

நன்றி சுடர் ஒளி

No comments: