தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்து அதனை அந்நியருக்கு விற்று விட துணிந்துவிட்ட எவரும் இந்நாட்டின் தலைவராகவோ அல்லது தம்மை தேசப்பற்றாளன் என சித்தரித்துக் கொள்ளவோ தகுதியற்றவர்கள்.
அவ்வாறானவர்களை மீண்டும் மீண்டும் தலைமைப் பதவியில் அமர்த்துவதனூடாக எமது நாட்டுக்கான தேசிய விடுதலையை பெற்று நாட்டைக் காப்பாற்ற முடியாது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
சூழ்ச்சியான ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அதிகாரத்தை இலங்கை மீது திணித்த முன்னாள் பிரதமா ராஜீவ் காந்தியை துப்பாக்கி கட்டையால் தாக்கி தனது எதிர்ப்பதை; தெரிவித்த இராணுவ வீரனே உண்மையான தேசப்பற்றாளன் என்றும் அவர் கூறினாh.
இந்தியாவின் இளம் சுதந்திர போரளியும் தியாகியுமான பகவத்சிங் பெயரிலனா சுதந்திர வரலாறு அடங்கிய நூலினை ஜே.வி.பி. யின் சோஷலிச இளைஞர் சங்கம் நேற்று வெயிளிட்டு வைத்த போதே மேற்கண்டவாறு கூறிப்பிட்டார். மேலும் :
இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்திப் போராடடிய பகவத்சிங்கின் போரட்டத்துக்கு மகாத்மாவின் அஹிம்சை வழிப் போராட்டம் பெரும் முட்டுக்கடடையாக இருந்தது. அதேவேளை, இந்திய சுதந்திரத்துக்காக இரத்தம் சிந்திவாகள் புறந்தள்ளபட்டு வெறுமனமே போராட்டங்களை நடத்தியவர்களிடம் இந்தியா ஒப்படைக்கபட்டது.
இந்தியரும் இலங்கையரும் மகாத்மாவை இந்தியாவின் தந்தை என் வர்ணிக்கபடுவதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.
சுதந்திரம் எனும் போது பிரத்தானியாவின் ஏகாதிபத்தியத்திடம் இரந்து விடுதலை பெற்றதை மட்டும் வரையறுத்துக் கொள்ளக்கூடாது. இலங்கை நாட்டுக்குள் சுநத்திரம் பறிபோயிருக்கின்றது. உழைக்கும் வர்க்த்தினரின் சுதந்திரம் பறி போயிருக்கிறது. அரச சொத்துக்கள் விரயமாக்கப்படுகின்றன. இலங்கையின் நிலப்பரப்புக்கள் அந்நியருக்கு விற்கப்படுகிறன்றது.
இலங்கையின் எண்ணெய் வளம் இந்தியாவுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது. சம்பூர் அபிவிருத்தித் திட்டம் இந்தியாவிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. இதேபோல் 1987ம் ஆண்டு கொல்லப்பட்ட இந்திய அமைதிகாக்கும்??? படையினருக்காக பாரளுமன்ற கட்டிடத்துக்கு அருகாக நினைவுத் தூபி அமைக்கபடுகின்றது.
இவைகளை வைத்துப் பார்க்கும் போது அரசியல் இலாபத்துக்காகவும் சுய இலாபத்துக்காகவும் அரச உடைமைகள் விற்கப்படுவதுடன் நாடும் காட்டிக் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறான பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்கப்படும் போதே உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.
உழைக்கும் வர்க்கத்தினரின் சம்பளக் கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கின்ற அரசு கோடிக் கணக்கான பணத்தை செலவிட்டு மாகாண சவைத் தேர்தல்களை நடத்துவது எவ்வித்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
1987 ஆம் ஆண்டு இந்தியவின் முன்னாள் பிரதமர் ராஜீPவ் காந்தி, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவை மிரட்டி பணியவைத்து ஒப்பந்தம் மேற்கோண்டபோது தாய் நாடு இந்தியாவிடம் அடிமையாவதை விரும்பாத இராணுவ வீரன் துப்பாக்கிக் கட்டையால் அவரைத் தாக்கி தனது எதிர்ப்பைக் காட்டினான்.
அதுவே அவரது தேசப்பற்றின் அடையாளமாகும். ஆனால், இன்றைய தலைவர்கள் தேசப்பற்றாளன் என தம்மை சித்தரித்துக்கொண்டு ஒருவித மாயையை உருவாக்கி இருக்கின்றமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
நன்றி வீரகேசரி
Tuesday, 15 July 2008
ராஜீவை தாக்கிய வீரனே உண்மையான தேசப்பற்றாளன் - ரில்வின் சில்வா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment